தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’. அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். 

Advertisment

இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

Advertisment

புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.