9th season of Super Singer Junior won the hearts of the people

தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 9 ஆவதுசீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் இந்நிகழ்ச்சியின் ஃபைன்ல்ஸ் நடைபெறவுள்ளது.

Advertisment

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றிநடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலொச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

Advertisment

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது. முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன், பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது.

இந்த முறை நடந்த சீசனில் கலந்துகொண்ட திறமையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சி முடிவடையும் முன்னதாகவே திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து ஒரு அட்டகாசமான பாடலைப் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடுவராகக் கலந்து கொண்ட இசையமைப்பாளர் தமன் மற்றும் இசையமைப்பாளர் இமான் மூலமும் பல குழந்தைகளுக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisment

இந்த சீசனில் பல அற்புதமான நெகிழ்ச்சியான சம்பவங்களும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் எனும் பகுதி பலரின் மனதைத் தொட்டது. மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர் வெடி கோகுல், தன் குரலால் கலக்கிய அக்‌ஷரா என பாடகர்கள் கலக்கிய தருணங்கள் இணையம் முழுக்க வைரலானது.

இது தவிர திரைப்பிரபலங்கள் மாரி செல்வராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சி, ராதா அவர்கள் கலந்துகொண்ட போது நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் நடிகர் இயக்குநர் எஸ் ஜே சூர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது. பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களால் களைகட்டிய சூப்பர் சிங்கர் ஜீனியர் சீசன் 9 ஃபைனல்ஸ் இன்று நேரு உள் விளையாட்டரங்கத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஶ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்‌ஷரா, அனன்யா, மேக்னா ஆகிய ஃபைன்லிஸ்ட்ஸ் கலந்துகொள்ளும் ஃபைனல்ஸ் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.