ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைத்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

AR Rahman

விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘99 ஸாங்ஸ்’. இப்படத்திற்கான கதையை ஏ.ஆர்.ரஹ்மான் எழுதியுள்ளார். இசையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகவலை, ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ar rahman
இதையும் படியுங்கள்
Subscribe