கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் 96. இந்த படத்தினை தெலுங்கில் ஜானு என ரீமேக் செய்யப்பட்டது.

Advertisment

samantha

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்து கடந்த மாதம் வெளியானது. தமிழில் 96 படம் வெற்றிகரமாக ஓடியளவிற்கு தெலுங்கு ரீமேக் அவ்வளவாக ஓடவில்லை. 15 கோடிகள் வரை இப்படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு, தோல்வியடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதன்மூலம் சமந்தாவை தோல்வி பட நடிகை என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.

Advertisment

இந்நிலையில் இந்த விமர்சனத்துக்கு சமந்தா பதிலளித்துள்ளார். அதில், “ஒரு நடிகர் தொடர்ந்து தோல்வி படங்களைக் கொடுத்தாலும், அவர் நடிக்கும் படங்களை திரையரங்கில் பார்க்கும் மக்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தாவிட்டாலும் அவரது முகத்தை திரையில் காண்பதற்காகவே திரையரங்குக்குச் செல்கிறார்கள். ஆனால் நடிகைகளின் படங்கள் வசூலைக் குவிக்காவிட்டால் எளிதில் பழி சொல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.