/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/96_17.jpg)
கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர்பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். காதலர்களின் அழகான வாழ்வியலை தனது எதார்த்த நடிப்பின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து காதல் படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் வேறு மாதிரியான உணர்வுகளைக் கொடுத்து பெரும் வெற்றி பெற்றது. கோவிந்த் வசந்தா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்தவகையில்96 படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்தபுதிய தகவல் ஒன்றுவெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பிரேம் குமார் 96 படத்தின் இரண்டாம் பாகத்தின்கதையைஎழுதி விட்டதாகவும்,இது குறித்து நடிகர்விஜய் சேதுபதி இயக்குநரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)