Advertisment

ஜானகியுடன் ஜானு! - வெளியானது '96' படத்தில் வெட்டப்பட்ட காட்சி  

சென்ற மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பையும் பெரும் வெற்றியையும் பெற்ற 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருந்தனர். படம் பார்த்தவர்களை காதல் வைரஸ் தாக்கி அவர்களை பழைய காதல்தேடிப் போகவைத்தது 96.

Advertisment

இப்படத்தில் திரிஷாவின் பெயர் எஸ்.ஜானகி தேவி. சிறப்பாகப் பாடக்கூடியவராக நடித்திருந்த அவர் பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகியின் பாடல்களை மட்டுமே பாடுவாரென்று கதைஅமைந்திருந்தது. இப்படியிருக்க இப்படத்துக்காகப் படமாக்கப்பட்டு, நீளம் காரணமாக நீக்கப்பட்ட காட்சி ஒன்று இன்று யூ-ட்யூபில் வெளியானது. அந்தக் காட்சிப்படி, இரவில் விஜய் சேதுபதியுடன் சென்னை சாலைகளில் நடந்துலாவும் திரிஷா, எதார்த்தமாக பாடகி ஜானகி வீட்டின் முன் வருகிறார். இது அவரது வீடு என்று விஜய் சேதுபதி சொல்ல, ஆச்சரியமடையும் திரிஷா, அந்த வீட்டின் முன் தான் நிற்க, பெயர்ப்பலகையில் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.ஜானகி என்னும் பெயர் தெரியுமாறு ஒரு ஃபோட்டோ எடுக்கச் சொல்கிறார். அந்த நேரத்தில், பாடகி ஜானகி அங்கே வர, அவர்கள் சந்திப்பது போல காட்சி அமைந்துள்ளது. அந்தக் காட்சி இதுதான்...

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/_sbkAFROsKc.jpg?itok=V5Zm2iTT","video_url":" Video (Responsive, autoplaying)."]}

vijaysethupathi trisha 96
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe