/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gowri.jpg)
கடந்த மாதம் ‘96’ என்ற படம், விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி, தமிழக, கேரள மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் அள்ளி குவித்தது. இந்த படம் பள்ளி பருவ காதலை மையாமக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் சேதுபதியின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கரும், திரிஷா பள்ளி கதாபாத்திரத்தில் கௌரி கிருஷ்ணனும் நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர். இப்படத்தில் இவரின் நடிப்பு பலரை கவனம் ஈர்த்ததால் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், கௌரி எந்த படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற அதிகார்ப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கௌரி அடுத்து மலையாள சினிமாவில் கால் எடுத்து வைக்கிறார். அனுகிரஹித்தன் என்னும் இந்த படத்தில் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். 2019 ஆண்டு கோடைக்கால விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)