96

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவான '96' படம் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தவரும், எம்.எஸ்.பாஸ்கரனின் மகனுமான ஆதித்யா அஜித் குறித்து நம்மிடம் பேசியபோது... "எனக்கு சிறு வயதில் இருந்து பாடுவது மிகவும் பிடிக்கும். மிமிக்கிரியும் பண்ணுவேன். ஆனால், அது எல்லாம் எனக்கு ப்ரொபெஷ்னல் என்று சொல்ல முடியாது. இப்போது நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறேன். அது தொழில் முறையாக மாறுமா என்று மற்றவர்கள் தான் சொல்லவேண்டும்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மற்றபடி எனக்கு சிறு வயதிலிருந்து கார் பந்தயம் மிகவும் பிடிக்கும். அதை வீட்டில் கூறியபோது 'கார் பந்தயமெல்லாம் தேவையில்லை, நீ ஒழுங்காக உன்னுடைய ப்ரொபெஷ்னலான நடிப்பதை தொடர்' என்று சொல்லிவிட்டார்கள். எனக்கும் அது சரி என்று பட்டதால் நடிப்புக்குள் வந்துவிட்டேன். மேலும் எனக்கு கார் பந்தயத்தில் ஆர்வம் அதிகமாக வரக் காரணம் 'தல' அஜித்குமார்தான். அதுமட்டுமில்லாமல் என் பிறந்த நாளும் மே 1 அன்று வருவதால், அவர் மேல் எனக்கு ஒரு தனி பாசம் உண்டு" என்று தன்னுடைய இன்ஸ்பிரேஷன் தல அஜித் குமார்தான் என்றார்.

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/OxQZjJ0zM2w.jpg?itok=DPebVHRt","video_url":" Video (Responsive, autoplaying)."]}