உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுசிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்வுக்காக அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியா சார்பில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியலை வெளியிட்டு வருகிறது ஆஸ்கர் அமைப்பு. அந்த வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த சர்வதேச திரைப்படம் விருதிற்கானநாமினேஷன் லிஸ்டில் 'செல்லோ ஷோ' படம் இடம்பெறவில்லை.
இருப்பினும், இந்தியாவில் டெல்லியின்பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை சரணாலயத்திற்குட்பட்டதெப்பக்காடு யானைகள் முகாம் பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றியஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படம்பிரிவிலும்நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.