Advertisment

'83' படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு; உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

83 movie teaser out now

1983 கிரிக்கெட்டில் கபில்தேவ்தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையைவென்றதை மையமாக வைத்து 83 என்ற படத்தைஇயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கபில்தேவாகவும், நடிகர் ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாகவும் நடித்துள்ளனர். அணியின் மற்ற வீரர்களாக தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகளைநிறைவு செய்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a2ecad8d-ea80-43c3-8ec0-6b30397749f2" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_63.jpg" />

Advertisment

இந்நிலையில் படத்தின் சிறு முன்னோட்டமாக படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் ட்ரைலர் வரும் 30 ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் உள்ளிட்ட மொழிகளில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

83 movie jeeva ranveer singh team india
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe