Published on 24/01/2019 | Edited on 24/01/2019

ரன்வீர் சிங் நடிப்பில் இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் மது மந்தேனா, விஷ்ணு இந்துரி, கபீர் கான் ஆகியோர் தயாரிப்பில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் வழங்கும் "83" படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் 10 ஏப்ரல் 2020 அன்று "83" திரைப்படம் வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. 1983ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் முதல் உலகக்கோப்பையை வென்ற வரலாறை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.