Advertisment

1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்!

 cxbx

1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியைப் பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாகக் கொண்டும், ஒரு முற்றிலும் வித்தியாசமான குடும்பப் பாங்கான கதையைப் படைத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தில், ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் முக்கியக் கதாபத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் இணைந்து ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

Advertisment

மேலும் இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. ஷரன் சாமுவேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்திருக்கிறார். நளினமான நடன அசைவுகளுக்கு ஜான் பிரிட்டோ பொறுப்பேற்றிருக்கிறார். மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி ‘ஓ அந்த நாட்கள்’ மும்மொழித் திரைப்படம் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்ற நிலையில் இப்படத்தின் சிங்கிள் பாடலான 'மெட்ராஸ் என்ன மெல்பர்ன் என்ன' என்ற பாடல் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/sudtnqlbKuM.jpg?itok=ywoobP_9","video_url":" Video (Responsive, autoplaying)."]}

oorvasi kushboo radhika Suhashini Atho antha naatkal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe