Advertisment

நிவேதா பெத்துராஜை ஏமாற்றிய 8 வயது சிறுவன்

8 year old boy cheated Nivetha Pethuraj

Advertisment

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை. இதையடுத்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பூ (Boo) படத்தில் நடித்திருந்தார். கடைசியாக கடந்த ஜூனில் வெளியான பருவு என்ற தெலுங்கு வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுவனால் தான் ஏமாற்றப்பட்டதாக நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “சென்னை அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். அவன் ஒரு புத்தகத்தை 50 ரூபாய்க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் 100 ரூபாய் கொடுத்தேன். அப்போது அந்த சிறுவன் என்னிடம் 500 ரூபாய் கேட்டான். நான் புத்தகத்தை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, 100 ரூபாயை மீண்டும் வாங்கினேன். அந்த நேரத்தில் புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன், என் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், இது போன்ற பிரச்சனையை நீங்கள் சந்தித்ததுண்டா எனக் கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அடையார் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Nivetha Pethuraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe