7g ரெயின்போ காலனி, செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி செம ஹிட் அடித்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் ஹிட் அடித்தது.

இந்நிலையில் 15 வருடங்கள் கழித்து இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரவிகிருஷ்ணாவும், கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வாலும் மீண்டும் பொதுவெளியில் சந்தித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இதை சோனியா அகர்வால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “பாருங்கள் நான் யாரை ரொம்ப நாட்கள் கழித்து சந்தித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் இந்த புகைப்படத்தை வைத்து கதிரும் அனிதாவும் மீண்டும் இணைந்துவிட்டனர் என்று கேலி செய்து மீம் போட்டு வருகின்றனர். சிலர் இந்த படத்தின் இரண்டாவது பாகமும் வருமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.