Advertisment

"இது ஒரு அழகான படம்" - கன்னட நடிகருடன் கைகோர்த்த கார்த்திக் சுப்புராஜ்

777 charlie movie release june10

Advertisment

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரக்ஷித் ஷெட்டி தற்போது '777 சார்லி' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். பாபி சிம்ஹா முதன் முதலில் கன்னட திரையுலகில் அறிமுகமாகும் இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.இயக்குநர்கிரண் ராஜ் இயக்கியுள்ள இப்படம் ஜூன் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கைப்பற்றியுள்ளார். மலையாளத்தில் பிரித்திவிராஜ் கைப்பற்றியுள்ளார்.இது தொடர்பான போஸ்டரைவெளியிட்ட கார்த்திக்சுப்புராஜ் "777சார்லி ஒரு அழகான படம். இப்படத்தை தமிழில் வெளியிட பெருமைப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான சித்தார்த், பாபி சிம்ஹா நைடபிள் வெளியானஜிகர்தண்டாபடத்தில் ரக்ஷித் ஷெட்டி கௌரவ வேடத்தில் தோன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

bobby simha prithivraj karthik subbaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe