69th national film awards update

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்என்று செய்திகள் வந்த நிலையில், சற்று தாமதமாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

69வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் தமிழ் கலைஞர்கள் மற்றும் தமிழ் படங்கள்விவரம் பின் வருமாறு.

Advertisment

சிறந்த தமிழ் படம் - கடைசி விவசாயி (மணிகண்டன்)

சிறப்பு விருது - நல்லாண்டி (கடைசி விவசாயி)

சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரேயா கோஷல் (‘மாயாவா சாயவா...’ - இரவின் நிழல்)

சிறந்த படம் - ராக்கெட்ரி - (இந்தி)

இதுபோக திரைப்படம் சாராத குறும்படபிரிவில் - ஸ்ரீகாந்த் தேவா (கருவறை), சிறப்பு கல்வித் திரைப்படத்திற்கான விருது- பி.லெனின் (சிற்பிகளின் சிற்பங்கள்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.