Skip to main content

'68-வது தேசிய திரைப்பட விழா' - விருது பட்டியல் வெளியீடு!

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

'68th National Film Festival' - full details

 

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

 

68-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் பின் வருமாறு, 

சிறந்த படம் (தமிழ்)- சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த படம் -  சூரரைப் போற்று (தமிழ்)

சிறந்த நடிகர் -  சூர்யா (சூரரைப் போற்று) , அஜய் தேவ்கன் - (தன்ஹாஜி)

சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறந்த இயக்குநர் - சச்சிதானந்தன் (அய்யப்பனும் கோஷியும், மலையாளம்)

சிறந்த திரைக்கதை - ஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா (சூரரைப் போற்று)

சிறந்த திரைக்கதை (வசனம்) - மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த அறிமுக இயக்குநர் - மடோன் அஷ்வின் (மண்டேலா) 

சிறந்த துணை நடிகர் - பிஜு மேனன் (அய்யப்பனும் கோஷியும், மலையாளம்)
 
சிறந்த துணை நடிகை - லட்சுமி ப்ரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தமிழ்)

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) - ஜி.வி. பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் (அய்யப்பனும் கோஷியும், மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் - சுமி (மராத்தி) 

சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - அனிஷ் மங்கேஷ் கோசாவி (தக்-தக், மராத்தி) 

சிறந்த ஒலிப்பதிவு - விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ ஷங்கர் (மாலிக், மலையாளம்)

சிறந்த ஒளிப்பதிவு - சுப்ரதிம் போல் (அவிஜாட்ரிக், பெங்காலி)

சிறந்த பாடல் - தமன் (ஆலா வைகுந்தபுரமுலோ, தெலுங்கு)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - நச்சிகேட் பார்வ் & மகேஷ் ஷெர்லா (தன்ஹாஜி, இந்தி)
 

சார்ந்த செய்திகள்