66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.

Advertisment

keerthy suresh

வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டது. விரைவில் விருது வழங்கும் நாள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மாநில படங்கள்...

தமிழ் - பாரம்

ஹிந்தி- அந்தாதுன்

தெலுங்கு- மஹாநடி

மலையாளம் - சுதானி ஃப்ரம் நைஜிரீயா

சிறந்த படம் - ஹெல்லாரோ(குஜராத்தி)

சிறந்த பாப்புலர் படம்- பதாய் ஹோ (ஹிந்தி)

சிறந்த இயக்குனர்- ஆதித்ய தார் (உரி)

சிறந்த நடிகர்- ஆயுஷ்மான் குர்ரானா (அந்தாதுன்) மற்றும் விக்கி கவுஷல் (உரி)

சிறந்த நடிகை- கீர்த்தி சுரேஷ் (மகாநடி)

Advertisment

சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் - கேஜிஎஃப் (கன்னட படம்) மற்றும் ஆவ் (தெலுங்கு படம்)

சிறந்த சண்டை காட்சி- கேஜிஎஃப்

சிறந்த பாடல் வரிகள் - கன்னட படம் நத்திசாராமி

சிறந்த சமூக அக்கறை கொண்ட படம்- பேட்மேன்

சிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத் படம் )