Advertisment

நடிகைக்கு ஆறு மாதம் சிறை... நீதிமன்றம் தீர்ப்பு...

அசல் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை கோய்னா மித்ரா. சூர்யா நடித்த அயன் படத்தில் ஹனி ஹனி பாடலிலும், தூள் படத்தில் கோடுவா மீசை என்ற பாடலிலும் நடனமாடி இருப்பார்.

Advertisment

jail

இவர் பூனம் செதி என்ற மாடல் அழகியிடம் கடன் வாங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.கடனை திருப்பி கொடுக்க 2013 ஆம் ஆண்டு நடிகை கோய்னா மித்ரா அவருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை கொடுத்து உள்ளார். ஆனால் நடிகையின் வங்கிக்கணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பி வந்தது.

இந்த காசோலை மோசடி குறித்து மாடல் அழகி பூனம் செதி, நடிகை கோய்னா மித்ரா மீது மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகை கோய்னா மித்ராவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் மாடல் அழகி பூனம் செதிக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை நடிகை கோய்னா மித்ரா கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

tamil cinema Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe