/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hema-actress.jpg)
சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க வந்துவிட்டதால், நடிகை விரும்பியது போல படிப்பை தொடர முடியவில்லை. இதனால் 53வயதில் மீண்டும் பட்டபடிப்பு படித்து வருகிறார் தெலுங்கு நடிகை ஹேமா. இவருக்கு வயது 53.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹேமா என்னும் கிருஷ்ண வேணி. கிழக்கு கோதாவரியை சேர்ந்த இவர், சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிறு வயதிலேயே திரைப்படங்களில் கவனம் செலுத்தியதால் அவரால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போனது. இதனால் தற்போது ஹைதராபாத்திலுள்ள அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பை படித்து வருகிறார். இதற்கான தேர்வில் அவர் கலந்துகொண்டபோது அங்கிருந்த மற்ற தேர்வு எழுதுபவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)