Advertisment

பிறந்தநாளுக்கு 5000 கிலோ கேக் வெட்டிய பிரபல ஹீரோ! 

2018ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான இது, ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

yash

தற்போது கே.ஜி.எஃப் 2 படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. டிசம்பர் 21ஆம் தேதி கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, வைரலானது. மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 8ஆம் தேதி இன்று கேஜிஎஃப் படத்தின் ஹீரோ யஷ் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக கே.ஜி.எஃப் படக்குழு ஒரு புது போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Advertisment

மேலும் யஷ்ஷின் பிறந்தநாளை வேறு லெவலுக்கு கொண்டாடும் வகையில் யஷ் ரசிகர்கள் 40 அடி அகலமும் 80 அடி நீளமும் கொண்ட 5000 கிலோ எடையுள்ள கேக் தயாரித்து அதை அவரையே வெட்ட வைத்துள்ளனர். இந்த கேக்கின் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

yash kgf
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe