கடந்த ஜூலை 4ஆம் தேதி ஜோதிகா அரசுப்பள்ளி ஆசிரியையாக நடித்து வெளியான படம் ராட்சசி. இந்த படத்தை புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்க, எஸ்.ஆர். பிரபு தயாரித்தார். கடந்த வாரம் வெளியான இப்படம் அரசுப்பள்ளிகளில் நடக்கும் தவறுகளையும், அரசு ஆசிரியர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறது படம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஆசிரியர்கள் இந்த படம் பள்ளிகளை தனியார்மயமாவதை ஊக்குவிப்பதாகவும், இந்த படத்திற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் படக்குழு, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இப்படம் போய்சேர வேண்டும் என்ற நோக்கத்தில் டிக்கெட் விலையிலிருந்து 50% தள்ளுபடி செய்ய ஏற்பாடு செய்துள்ளது.