Advertisment

கஜா புயல் பாதிப்பிற்கு 50 லட்சம் நிதி வழங்கிய சிவகுமார், சூர்யா குடும்பம் 

sivakumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சூர்யாவின் படத்தயாரிப்பு நிறுவனமான 2டி என்டெர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... "தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளதால் வாழ்வாதாரங்களாக விளங்கிய மரங்கள் பேரழிவுக்கு ஆளாகியுருக்கின்றன. புயல் மற்றும் கனமழை காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். இது தொடர்பாக வரும் புகைப்படங்கள் யாவுமே நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. "தமிழ்நாட்டின் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவை வழங்குவது காவிரிப் படுகை" என்று நெல் ஜெயராமன் தெரிவித்திருப்பது நூறு சதவீதம் உண்மை. அந்தப் பகுதிகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் வழங்கியுள்ளனர். திரு.சிவகுமார், திரு.சூர்யா, திரு.கார்த்தி, திருமதி.ஜோதிகா ஆகியோர் இணைந்து மொத்தமாக 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுத்திருக்கிறார்கள். இதனை அப்பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் என்ன உதவிகள் தேவை என்பதை தெரிந்து செய்யவுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

sivakumar gaja storm
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe