தேவி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்டு வந்துகொண்டிருக்கும் நடிகர் பிரபுதேவா.அவரதுநடிப்பில் அடுத்ததாகப் "பொன் மாணிக்கவேல், யங் மங் சங்", ஆகிய படங்கள் ரிலீஸுக்குதயாராகவுள்ளன. இதில் பொன் மாணிக்கவேல் படம் பிரபுதேவாவின் 50வது படமாகும்.

Advertisment

bfg

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் இவர் தேள், பஹீரா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகும் பஹீரா படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் மொத்தம் 5 நாயகிகள் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் நடித்த காயத்ரியும், 'அனேகன்' படத்தில் நடித்த அமைராவும் வரும் காட்சிகளைப் படமாக்கிவிட்டனர். மேலும் ரம்யா நம்பீசன் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோரின் காட்சிகள் படமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு கதாநாயகி யார் என்று முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை கோவா மற்றும் இலங்கையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.