ADVERTISEMENT

திடீரென மூடப்பட்ட 400 தியேட்டர்கள்!

05:10 PM Jul 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் திரையரங்கு டிக்கெட் விலையை கணிசமாக குறைத்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், திரைபிரபலங்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் ஒன்றாக இணைந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக ஆந்திராவில் திரையரங்குகளில் வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு கட்சிக்கு 20 முதல் 40 பேர்கள் மட்டுமே வருகின்றனர். அதில் வரும் வருமானம் திரையரங்கு பராமரிப்புக்கு கூட போதவில்லை என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 400 திரையரங்குகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகளுக்கு போதிய பார்வையாளர்கள் வராததால் அதனை முடி வைத்துள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தசரா அல்லது சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது, அதனால் அன்றுவரை நஷ்டத்தில் இயங்கும் திரையரங்குகளை மூடிவைக்க அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT