விஷால் புகார் எதிரொலி; 4 பேர் அதிரடி கைது

 4 people arrested for vishal house attack issue

சென்னை அண்ணாநகரில் இருக்கும் விஷால் வீட்டில் கடந்த 26ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் விஷால் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் விஷாலின் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்போது 4 பேரை கைது செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிகப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில், இந்த 4 பேர் வந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்த போது, அந்த சம்பவம் நடக்கும் போது நான்கு பேரும் மதுபோதையில் இருந்ததாகவும் அப்போது தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக விஷால் வீட்டில் கல் பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

actor vishal
இதையும் படியுங்கள்
Subscribe