'30 Years of cinema journey'- Shah Rukh Khan released his 'pathan' movie poster

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடித்த பல படங்கள் தமிழில்டப்செய்து திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. ஷாருக்கான், தற்போதுஅட்லீஇயக்கும் 'ஜவான்' மற்றும் பிரபல இயக்குநர் ராஜ்குமார்ஹிரானிஇயக்கத்தில் 'டன்கி' படத்திலும் நடிக்கிறார். இதனிடையே 'யாஷ்ராஜ்பிலிம்ஸ்' தயாரிப்பில் 'பதான்' படத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் தீபிகாபடுகோன்,ஜான்ஆப்ரஹாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் ஷாருக்கான், திரையுலகிற்கு வந்து 30-ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி ரசிகர்கள் மற்றும்திரைபிரபலங்கள்பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'பதான்' படக்குழு படத்தின்மோஷன்போஸ்டர்மற்றும்போஸ்டரைவெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் எனப் படக்குழுஅதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது.

Advertisment