சித்தார்த் நடிப்பில் '8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘3 பிஹெச்கே’(3 BHK). இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்பாக இப்படத்திற்கு சிம்பு பாராட்டு தெரிவித்திருந்தார். படத்தை பார்த்த அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் படம் உணர்ச்சிப்பூர்வமான பயணம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து படம் வெளியான பிறகும் ரசிகர்களிடம் இப்படம் வரவேற்பை பெற்றது.
நடுத்தர குடும்பத்தின் வீடு வாங்கும் கனவை பற்றி இப்படம் பேசியிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்திலும் ஆகஸ்ட் 1 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.