Skip to main content

2.O டீசரை இப்படியும் பார்க்கலாம் 

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
2.0

 

 

 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் '2.O' படத்தின் டீசர் 3Dயில்  வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் எந்தெந்த திரையரங்குகளில் '2.O' பட டீசர் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மேலும் 3D யில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் டீசரை தற்போது ஒரே நேரத்தில் 2Dயில் யூடுபிலும், திரையரங்குகளிலும் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடித்திருக்கும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்வம் காட்டாத ரஜினி... விழாவை ரத்து செய்த லைகா ! 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
2.0

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் இதுவரை சுமார் ரூ.750 கோடி வசூலைத் தாண்டி இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. ஆனால் இதில் ரஜினிகாந்த் அதிகம் ஆர்வம் காட்டாததால் ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தற்போது ரத்து செய்துள்ளது லைகா நிறுவனம்.

 

 

Next Story

ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்த 2.0...சாதனை மேல் சாதனை படைப்பு 

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
2.0

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 2.0 படம் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும் அதிவேகமாக இச்சாதனையை நிகழ்த்திய படமாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் ரூ.1000 கோடியை விரைவில் எட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே '2.0' படம் வரும்  2019 மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2.0