rajini

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ரஜினிகாந்த் நடிப்பில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம் '2.O'. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக எமிஜாக்சனும், வில்லனாக ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளிக்கே இப்படம் வெளியாக இருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகளின் தாமதத்தால் மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. இதையடுத்து கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், வரும் நவம்பர் மாதம் 29ஆம் தேதி '2.O' படம் வெளியாகயிருப்பதாகவும் இயக்குனர் சங்கர் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடுவதாக இயக்குனர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.