Published on 06/12/2018 | Edited on 06/12/2018

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 2.0 படம் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும் அதிவேகமாக இச்சாதனையை நிகழ்த்திய படமாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் ரூ.1000 கோடியை விரைவில் எட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே '2.0' படம் வரும் 2019 மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
