rajasekar

Advertisment

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தக் கிளப்பிற்கு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன். இவர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சீ.இ.ஓ மற்றும் இணை தயாரிப்பாளர் ஆவார்.

இவருக்குத் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் மிக அதிகம். தேசிய அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அனைவருடைய பாராட்டையும் பெற்ற இவர், தற்போது சென்னை ரைஃபில் கிளப்புக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவருக்கு முன்பாக இந்தப் பதவியில் ‘தினத்தந்தி’ உரிமையாளர் டாக்டர் பி.சிவந்தி ஆதித்தன் இருந்தது குறிப்பிடத்தக்கது.