ஆர். பி.சௌத்ரிதயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு வெளியான படம் 'சூர்யவம்சம்'.விக்ரமன்இயக்கியிருந்தஇப்படத்தில்தேவயானி,ராதிகாசரத்குமார், பிரியா ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். குடும்ப பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும்வரவேற்பைப்பெற்றது. தமிழில் கிடைத்தவரவேற்பைத்தொடர்ந்து இப்படம் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில்ரீமேக்செய்யப்பட்டது.
இந்நிலையில் 'சூர்யவம்சம்' படம் வெளிவந்து இன்றுடன் (27.06.2022) 25-ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இதற்கு ரசிகர்கள் மற்றும்திரை பிரபலங்கள்பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக சரத்குமார் தனதுட்விட்டர்பக்கத்தில், "ஆர்பிசௌத்ரிதயாரிப்பில்,விக்ரமன்இயக்கத்தில்சூப்பர் ஹிட்படமான 'சூர்யவம்சம்' படத்தில் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. ஒரு அற்புதமானபிளாக்பஸ்டர்திரைப்படம். இதுவரையில் திரையரங்குகளில் அதிக எண்ணிக்கை மக்கள் பார்த்த சாதனையை இன்று வரை வைத்திருப்பதும், ஒரு வருடம் வரை படம் ஓடியதும் சாதாரண விஷயமல்ல. ரசிகர்கள், நலம் விரும்பிகள், படத்தைப் பார்த்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றி, அதை எப்போதும் மறக்க மாட்டேன். அது போன்று ஒருசூப்பர் ஹிட்படத்தை மீண்டும் கொடுக்கும் வகையில் கடினமாக உழைப்பேன்"எனக்குறிப்பிட்டுள்ளார்.
#25yearsofSuryavamsam @realradikaa @SuperGoodFilms_ #RBChoudary #Vikraman #SARajkumar #Devayani #Manivannan #RSundarRajan #Anandaraj #சூர்யவம்சம் #90skids #favourite #motivationalmovie #Suryavamsam pic.twitter.com/BNvAXtYSnm
— R Sarath Kumar (@realsarathkumar) June 27, 2022