/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_2468.jpg)
     style="display:block"      data-ad-client="ca-pub-7711075860389618"      data-ad-slot="9350773771"      data-ad-format="auto"      data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீன் தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' வாங்கியுள்ளது. 1979ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'நீயா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக இயக்கியுள்ளார் இயக்குநர் எல்.சுரேஷ். மேலும் ஷபீர் இசையில் ஏற்கனவே 'தொலையுறேன்' பாடல் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற நிலையில், நேற்று 'இன்னொரு ரவுண்டு' என்ற பாடல் வெளியியாகிவுள்ளது. 'நீயா' படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு. அதுபோலவே, 'நீயா 2'விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது. பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)