Skip to main content

சென்னை சர்வதேச திரைப்பட விழா; விருதுகளும் பரிசுகளும்!

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 21st Chennai international film festival

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. 

இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர்த்தோழில், விக்ரம் சுகுமாரனின் ராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டு படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக உடன்பால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.

மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்த்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்த்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆம்ஸ்ட்ராங்கை ரோல் மாடலாக எடுத்திருந்த இளைஞர்களுக்கு பேரிழப்பு” - வெற்றிமாறன்

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Vetimaaran said Disaster for the youth who had taken Armstrong as their role model

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங்கினுடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வருகையையொட்டி பெரம்பூர், செம்பியம் பகுதியில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இளைஞர்களை ஒருங்கிணைத்து எல்லோரையும் படிக்க வைத்து அவர்களை நல்வழிப்படுத்தின பெரிய ஆளுமை. இந்த இழப்பு எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. குறிப்பாக, அவரால் ஈர்க்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் படித்து பெரிய இடங்களில் இருக்கிற இளைஞர்களுக்கும், அவரை ரோல் மாடலாக எடுத்து படித்துகொண்டு இருப்பவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதற்கான இடம் தொடர்பாக நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன். அவர்களின் விருப்பம் என்னவோ அதைச் செய்வதே சரியாக இருக்கும். இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு கட்சியினுடைய மாநிலத் தலைவருக்கு இப்படி நிகழ்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

Next Story

“இது இல்லனா என் படம்லாம் வெளியவே வராது” - வெற்றிமாறன்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Vetrimaran said about editing

சென்னையில் திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிங்கம் புலி, ஆர்.பி. உதயகுமார் நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 

இதில் பேசிய வெற்றிமாறன், “சினிமாவுல என்ன தப்பு வேணாலும் சூட்டிங் ஸ்பாட்ல பண்ணலாம். அதை எடிட்டிங்ல கரக்ட் பண்ணிட முடியும் என்கிற தைரியம் எனக்கு எப்போது இருக்கு. என்னை மாதிரி ஸ்டைல்ல படம் எடுக்குறவங்களுக்கு எடிட்டிங் ரூம் ஸ்ட்ராங்கா இல்லனா என் படம்லாம் வெளியவே வராது. அதுக்கு காரணம், நான் இரண்டு மிக சிறந்த எடிட்டர்களோடு வேலை பார்த்தது தான். ஒருவர் பாலு மகேந்திரா. நிறைய பேர் அவருடைய ஒளிப்பதிவு பத்தி பேசுவாங்க, இல்லனா ரைட்டிங் பத்தி பேசுவாங்க. 

ஆனால், நான் அவர் பக்கத்தில் இருந்து பார்த்ததில், அவருடைய மத்த திறமைய காட்டிலும் அவர் ஒரு தலைசிறந்து எடிட்டர்.  அவரிடம் வேலை பார்த்த உதவி இயக்குநர்கள் எல்லோருக்கும் எடிட்டிங் அறிவு கொஞ்சம் இருக்கும். என்னுடைய முதல் படத்தில் இருந்து எடிட்டர் என்கூடவே இருந்து என் படங்கள உருவாக்குறாங்க. இந்த இடத்துல என்னுடைய இடம் இருக்கனும்னு நினைச்சு இங்கு வந்துருக்கேன்” என்று கூறினார்.