20th year anniversery for prabhas in cinema

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி பட வெற்றிக்குப்பிறகு பான் இந்தியா ஸ்டாராக பிரபலமானார். இப்போது ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதி புருஷ்'படத்தில் நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Advertisment

மேலும் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இப்படமும் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதனிடையே பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் திரையுலகில் அடியெடுத்து வைத்து இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் பிரபாஸிற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.