மனப்புரம் ஃபைனான்ஸ் லிமிடட் மற்றும் டி.கியூ.வாட்சஸ் நிறுவனம் வழங்கும் 2021-ம் ஆண்டிற்கான 'மிஸ் தமிழ்நாடு' அழகிப் போட்டியானது ஐ.டி.சி.கிராண்ட் சோழா ஹோட்டலில், கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. ரேஸ்மதஸ்குழுமம் இப்போட்டியை இணைந்து வழங்கியது. போட்டிக்கான நடுவர்களாக நடிகை ஐஸ்வர்யா தத்தா, நிகழ்வு மேலாளர் ஜோ மைக்கேல், உளவியலாளர் அபிலாஷா மற்றும் சுதாராஜன் செயல்பட்டனர்.
பல்வேறு மாடல் அழகிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், 2021-ம் ஆண்டிற்கான மிஸ் தமிழ்நாடு அழகியாக, தச்சனி சாந்தா சொரூபன் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே ஷண்முகப்பிரியா மற்றும் கீர்த்தனா கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், நடுவர் குழுவினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.