Advertisment

96வது ஆஸ்கர் விருது விழா; இந்தியா சார்பில் போட்டியிடும் படம் அறிவிப்பு

2018 is indias official entry in 96th oscar award

Advertisment

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான '2018' படம் இந்திய சார்பில் அனுப்ப தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம்உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படக்குழு குறிப்பிட்டிருந்தது. கேரளாவில் வெள்ளம் வந்த போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாக படத்தில் பேசப்பட்டிருக்கிறது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற பெருமையும் பெற்றது.

2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் 10 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த படம் விருது பெறவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட 'ஆர்.ஆர்.ஆர்' படம் சிறந்த பாடலுக்கான பட பிரிவில் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

oscar awards tovino thomas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe