2018 director Jude Anthany Joseph accuses actor Antony Varghese

மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள '2018' படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் 4 நாட்களில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "வந்த வழியை மறந்து நன்றி இல்லாமல் இருப்பது சரியல்ல. ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி போன்றவர்கள் போதைப்பொருள் உட்கொண்டதாகவும் அடிமையானதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

Advertisment

ஆனால், போதைப்பொருளை விட மிகப்பெரிய பிரச்சனையாக நான் பார்ப்பது மனிதாபிமானமின்மை மற்றும் அசுத்தத்தை வெளிப்படுத்தும் துணிச்சல் தான். மலையாள திரையுலகில் ஆண்டனி வர்கீஸ் என்று ஒருவர் இருக்கிறார். எல்லோரும் அவரை மிகவும் நல்லவர் என்று நினைக்கிறார்கள். அவரை வைத்து நான் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தது. அப்படத்தை எனது அசோசியேட் ஒருவர் இயக்கவுள்ளதாக இருந்தது.

வர்கீஸ் தனது சகோதரியின் திருமணத்திற்காக படத்தின் இணை தயாரிப்பாளரும் எனது நண்பருமான அரவிந்திடம் ரூ. 10 லட்சம் முன்பணமாக வாங்கினார். பின்னர், படம் தொடங்குவதற்கு 18 நாட்களுக்கு முன்பு அவர் விலகினார். அதன் பிறகு வர்கீஸ் பணத்தை அரவிந்திடம் திருப்பிக் கொடுத்தார். இப்படி தகுதியற்ற பலர் இத்துறையில் உள்ளனர். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி அவரை திரைத்துறைக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால்வர்கீஸ் போன்றவர்களை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியமே இருந்திருக்காது" என்றுள்ளார்.

Advertisment

சமீப காலமாக மலையாள நடிகர்கள் சிலர் படப்பிடிப்பிற்குபோதைப் பொருள் உபயோகித்து வருவதாகவும் இதனால் மற்ற கலைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோர்திரைப்படங்களில் நடிக்கத்தடை விதிக்கப்பட்டது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.