விஜய் சேதுபதி தற்போது விஜய்யுடன் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கான காட்சிகள் டெல்லியில் நடைபெற இருப்பதாகவும், அங்குதான் விஜய்யும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் சண்டை காட்சிகள் படமாக்கப்படு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் டெல்லியில் உருவாகியுள்ள காற்று மாசு காரணமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

vjs

நடிகர் விஜய் சேதுபதி படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல சமீபத்தில் மண்டி என்னும் ஆன்லைன் வியாபார ஆப் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதனால் சிறு குறு வியாபாரிகளின் வணிகம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். இது சிறுகுறு வியாபாரிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தது. இதை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டனர்.

Advertisment

சிறு குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கி கொண்டு துணைபோவதாக நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e7cffbde-04e6-4c3d-8061-f02006bbc878" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300-02_8.jpg" />

Advertisment

ஏற்கனவே முற்றுகை போராட்டம் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்தை கொளத்தூர் த.ரவி அவர்களின் தலைமையில் முற்றுகையிட்டனர். இதற்காக தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவைகளை சேர்ந்த வணிகர்கள் சுமார் 200 மேற்பட்டோர் சாலையில் பேரணியாக கையில் பதாகைகளுடன் விஜய் சேதுபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு அவரது அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அவர்களை பாதியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.