Advertisment

'மௌனம் பேசியதே' வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு; இயக்குநர் அமீர் எழுதிய உருக்கமான கடிதம்

20 years since the release of Maunum Pasithe; A warm letter from director Aamir

Advertisment

மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து இயக்குநர் அமீர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “சாதாரணமாக மதுரையில் இருந்த அமீர் இன்றைக்கு அறியப்பட்ட - வாழ்த்தப் பெற்ற ஒரு ஆளாக உங்கள் முன் நிற்பதற்கான தொடக்கம் திரைக்கலைஞன் என்னும் அடையாளம் தான்.

அந்த அடையாளத்தைப் பெற்றுத் தந்த என்னுடைய முதல் திரைப்படம் ‘மௌனம் பேசியதே’வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Advertisment

சென்னையை நோக்கி - சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, ‘மௌனம் பேசியதே’திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும்,

நான் இயக்குநராவதற்கு உறுதுணையாக இருந்த நடிகர் சூர்யா, என்னோடு பயணித்து வெற்றிக்கு கரம் கொடுத்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா, கவிஞர் சினேகன் உள்ளிட்ட அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு என் நன்றிகள்.

என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 20 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக - பத்திரிகைநண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும், குறிப்பாக ‘மௌனம் பேசியதே’ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.” எனக் கூறியுள்ளார்.

actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe