2.O படத்தில் வருவது காகம் அல்ல... ஷங்கர் சொன்ன 2.O பட சீக்ரெட்

shankar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் '2.O'. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பஜெட்டில் சுமார் ரூ543 கோடிக்கு மேல் செலவழித்து மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறது. மேலும் டீசரில் நடிகர் அக்ஷய்குமார் காகமாக வருவதாகவும், படத்தில் அவருக்கு விஞ்ஞானி ரிச்சர்ட் என்ற கதாபாத்திரம் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் இந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளார். சமீபத்தில் ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு ஷங்கர் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது.... டீசரில் நீங்கள் பார்த்தது காகம் அல்ல, அது வேறு ஒரு பறவை. அதே போல் அக்ஷய்குமார் விஞ்ஞானி ரிச்சர்ட் என்ற கதாபாத்திரதில் நடிக்கவில்லை. மேலும் அடுத்து நான் இயக்கும் இந்தியன் 2 படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் எடுக்கவுள்ளேன். அதற்கு முழு ஸ்க்ரிப்ட் என்னிடம் தயாராக உள்ளது" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

2.0 aishwaryarai amyjackson rajinikanth shankar
இதையும் படியுங்கள்
Subscribe