/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/100_73.jpg)
'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்குத்தம்பியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் தர்ஷன். பின்பு 'கனா' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்பு 'தும்பா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் அஜித்தின் 'துணிவு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவரது பெயரைத்தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணமோசடி நடந்துள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தர்ஷன் பெயரில் போலி ஐடி வைத்திருந்த ஒரு நபர் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். பின்பு அந்த பெண்ணின் செல்போன் என்னை வாங்கி அவருடன் வாட்ஸ் ஆஃப் முலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருங்கி பழகி வந்துள்ளார்.
அந்த பெண்ணின் புகைப்படங்களைத்தவறாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிட போவதாக மிரட்டியுள்ளார். அதை வைத்து 2 லட்சம் ரூபாய் வரை அந்த பெண்ணிடம் பணம் பறித்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த மர்ம நபர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அலாவுதீன் (27) மற்றும் வாகித் (26) ஆகிய இருவரும் என தெரியவந்துள்ளது. இருவரும் சகோதரர்கள் எனவும் ஒரு ஐடி மூலம் இருவரும் அந்த பெண்ணுடன் பழகி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்பு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)