Advertisment

சர்வதேச எழுத்தாளர் ராம் கமல் முகர்ஜியின் பங்களிப்பில் உருவாகும் '1770'

1770 movie update out now

Advertisment

பிரபல எழுத்தாளரான பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு 1770 என்ற பெயரில் படமாக உருவாக்கவுள்ளது. இப்படத்தை ராஜமௌலியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஷ்வின் கங்காராஜூ இயக்க, புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தை எஸ்.எஸ்1 என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் பி. கே. என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது

இப்படம் குறித்து இயக்குநர் அஸ்வின் கங்கராஜு பேசுகையில், '' இந்த தலைப்பு எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இந்தியாவின் பிரபலமான கதாசிரியர் வி. விஜயேந்திர பிரசாத் அவர்கள் கதை மற்றும் திரைக்கதையை எழுதி எளிமைப்படுத்தியதால், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் படைப்பாக உருவாகும் என நினைக்கிறேன். ஒரு படைப்பாளியாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் படைப்புகள், வாழ்க்கையை விட உணர்வுகளும் ஆக்ஷனும் மிகுந்த கதைகளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். அந்த தருணத்தில் இந்த கதை எனக்கு பொருத்தமானதாக இருக்கும் எனத் தோன்றியது. தொடக்கத்தில் சிறிது தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனால் கதாசிரியர் ராம் கமல் முகர்ஜியை சந்தித்ததும், கதையை அவரது கோணத்தில் கேட்டதும் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது" என்றார்.

s.s.rajamouli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe