‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இந்த வருட தீபாவளியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

vijay atlee

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக விஜய் மற்றும் அட்லீ இணைந்துள்ளனர். சென்னையில் இந்த படத்திற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்க்ப்பட்டு பல கோடி செலவில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி விரைகிறது படக்குழு.

Advertisment

இந்த படத்தின் கதை பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா வில்லு படத்திற்கு பின் நடிக்கிறார். யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

சமீபத்தில்தான் தளபதி 63 கதை என்னுடைய குறும்பட கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு வந்து சர்ச்சை எழுந்தது. அப்போது படக்குழு தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தது. அட்லி தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இப்படத்தில் நடிக்கும் இந்துஜா, “நான் நடிகர் விஜயை பார்த்தேன்” என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்துஜாவுடன் ரெபோ மோனிகாஜான், அத்மிகா மற்றும் வர்ஷா பொல்லம்மா என மொத்தம் 16 நடிகைகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.