ADVERTISEMENT

ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்?

06:09 PM Oct 05, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இக்கூட்டணியில் உருவான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்க, இரண்டாம் பாகத்தையும் தற்போது தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், இவ்வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாக '12th Man' படத்திற்காக இணைந்தது. த்ரிஷ்யம் படங்களின் தொடர்ச்சியாக இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளதாகக் கடந்த ஜூலை மாதம் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு 48 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. தற்போது இப்படத்திற்கான இறுதிக்கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், '12th Man' படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '12th Man' படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப் படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும், இது தொடர்பான அறிவிப்பை உரிய நேரத்தில் படக்குழு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT