இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 12த் ஃபெயில் படத்திற்காக தேசிய விருது வாங்கவுள்ளார் அப்படத்தின் இயக்குநர் விது வினோத் சோப்ரா. இவர் 2007ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், சஞ்சய் தத், சைஃப் அலிகான் உள்ளிட்ட பலரை வைத்து ‘ஏக்லவ்யா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் அப்போது அமிதாப் பச்சனுக்கு ரூ.4.5 கோடி மதிப்புள்ள புகழ்பெற்ற ரோல் ராய்ஸ் காரை பரிசளித்தார்.
‘ஏக்லவ்யா’ படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கும் அவருக்கும் சண்டை வந்திருந்ததால், அதையும் மீறி அமிதாப் பச்சன் நடித்து கொடுத்ததிற்காக காரை பரிசளித்ததாக முன்பு ஒரு நேர்காணலில் விது வினோத் சோப்ரா தெரிவித்திருந்தார். இந்த பரிசிற்காக தனது தாயிடம் அடி வாங்கியதாக தற்போதைய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, “அந்த சம்பவத்தை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். நான் அமிதாப்பிற்கு காரை பரிசளிக்கும்போது என் அம்மாவையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். அவர் காரின் சாவியை அமிதாப்புக்கு கொடுத்தார். பின்பு என்னுடைய காரான மாருதி வேனில் நானும் அவரும் வீட்டுக்கு திரும்பினோம். அப்போது என்னிடம் ட்ரைவர் இல்லாததால் நானே காரை ஓட்டிச் சென்றேன். அப்போது ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பற்றி பேசிக் கொண்டு வந்தோம். பின்பு காரின் விலையை நான் சொன்னதும், அம்மா என்னை அரைந்துவிட்டார். மேலும் திட்டியும் விட்டார். அதை நான் மறக்கவே மாட்டேன்” என்றார்.