10th student directing vijay yesudas

Advertisment

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின்மகன் விஜய் யேசுதாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான பாடல்களைபாடியுள்ளார். அத்துடன் நடிப்பிலும் கவனம் செலுத்தும் விஜய் யேசுதாஸ் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் நடிகனாக அறிமுகமானார். அதன் பிறகு படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் யேசுதாஸ் அடுத்தாக10 ஆம் வகுப்பு மாணவி சின்மயி நாயர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கங்காரு படத்தின் கதையை எழுதி திரையுலகில் அறிமுகமான அனில் ராஜின்மகள் தான் சின்மயி நாயர். 10 ஆம் வகுப்பு இவர் விஜய் யேசுதாஸைவைத்து கிளாஸ் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சின்மயி நாயரின்தந்தை அனில்ராஜ் திரைக்கதை எழுதியுள்ளார்.இப்படத்தில் பாடகர் யேசுதாஸ், சுதீர், மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். சாபு குருவிலா மற்றும் பிரகாஷ் குருவிலா ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அடுத்தடுத்தஅறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.