தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன். சினிமாவில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் பலரை சினிமாவிற்கு அறிமுகம் செய்துவருகிறார்.

இவர் தயாரிப்பில் முதன் முதலாக வெளியான படம் கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து பிளாக் ஷீப் டீமை வைத்து நெஞ்சமுண்டு நேரமையுண்டு ஓடுராஜா என்ற படத்தை தயாரித்தார். இது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய மூன்றாவது படம் குறித்தான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அருவி படத்தை இயக்கிய அருண்பிரபு இயக்குகிறார் என்றும் அந்த படத்தின் பெயர் வாழ் என்றும் படக்குழு அறிவித்தது. தற்போது அந்த படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டதாகவும் சுமார் 100 இடங்களுக்கு மேல், 75 நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.