style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக்கான '100 சதவீதம் காதல்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தணிக்கைக் குழுவில் இப்படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு 2019 பிப்ரவரியில், படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாசர், தம்பிராமய்யா, தலைவாசல் விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.